இருப்பதைக் கொண்டு

இனிமையாய் வாழ்வோம்..

இறப்பு வரும் வரைக்கும்
இன்பமாய் இருப்போம்..


இரவலாய் இன்பம் கேட்டு
இம்சை பெறுவதை மறப்போம்..

இன்னும் கொஞ்சகாலம்
இப்புவியில் வாழ்வோம்...


இருவரி கலப்பில்
இருதயங்களில் இனிப்போம்..


இணைந்தே இன்னும் பல
இரவுகள்  காண்போம்...

இனிப்போ கசப்போ
இருப்பதை உண்போம்..

இப்போதைக்கு தேவை தீர்க்க
இணையோடு இணைந்தே இயங்குவோம்..

இந்த நொடி வேண்டுமென்று
இமை விழித்து எழுவோம்..

இன்னும் என்ன வேண்டுமென்று
இன்பத்தை இறைவனுக்கும் கொடுப்போம்..


இந்த முறை தோல்வி கண்டோம்
இமை வழியே தோற்றோம்..

இருக்கும்வரை முயற்சி செய்து
இன்னும் பல முறை வெல்வோம்..

இன்பத்தை எப்போதும்
இருக்குமிடம் தேடோம்..

இம்மனிதப் பிறவியே
இன்பமெனக் கொள்வோம்...