விபத்தில் உடல் செயலற்ற ஒரு மனைவியின் மடல்அவள் கணவனுக்கு...


நான் இருந்தும்
பயனில்லையடா..உனக்கு..
நான்னில மண்ணிலும்
நாட்டுவைத்திய சாலையிலும்..
என் உடல் தூக்கி..
நீ நடந்தாய்..
நாட்கள் தான் கடந்ததடா..
என் நாடி துடுப்பு
அதிகரிக்க காணலியே..
என் கழுத்தில்
மூணு முடி
போட்டவுடன்
அந்த மகிழ்வுந்தில்
நாம் மகிழ்ந்திருக்க..உன்
மடிமீது
என்மடி சாய
குடுத்து வைக்க..
நேரமில்லை.. அந்த
கயவனுக்கு..
குடிகாரனுக்கு..
நன்மையும் தீமையும்
எதுவென்று தெரியாமல்..அவன்
குடித்த குடி
நம் குடி கெடுத்ததடா..
அந்த விபத்தில்
என் மூட்டெழும்பு
மட்டும் முறிந்து
என் உயிர் உடம்பில்
ஒட்டிக் கொள்ள
ஒரு காரணமும் இருக்குதடா..
கண்ணாளா..
இப்போது என் ஊண்குழல்
சத்தமிடுகிறது..
நீ இட்ட முத்த மெல்லாம்
சேர்த்து வைத்த
பொக்கிஷமாய் என்
உயிர் குடித்து உன் கரம் தீண்ட..
காரணமாய் இருந்ததடா..
ஆம்..என் கற்பினில்
நீ மூட்டிய தீ பற்றி எரிந்து
இன்று உன்னையும்
பற்றிக்கொள்ள
நம் பாப்பா என் வயிற்றில்
வள்ளலாய் வந்திருக்கு..
நான் கண்ட கனவெல்லாம்
அவள் என் உருவில்
தீர்த்து வைப்பாள்..
கவலைப்படாதே..கண்ணா..
நான் இந்த காற்றினில்..
கலந்திருப்பேன்..
எனக்கு விடை கொடு
போய் வருகிறேன்..
என் இதழ் பதித்து
ஒரே ஒரு முத்தமிடு முக்தியடைகிறேன்..