உங்கிட்ட
கெஞ்சனும்..
உன்ன நான் கொஞ்சனும்...
கால்களை இணைத்து
அந்த கடற்கரை மணலில்..
கவிதைகள் எழுதனும்...
உன்னைமுத்தமிட்டே
உடைந்து போகும்
அந்த நிலவின் ஒளியை
கைது செய்ய
காவல்நிலையம் போகனும்...
உன் கைரேகை கவிதைகளை
என் காலை உணவில்
பார்க்கனும்....
என்னவென்று
சொல்வது
உன் வருகைக்காக
நான் காத்திருப்பதை...
இமை மூடாத கனவுகள்...
ஜோடி இல்லாத காலணிகள்...
வாசனை இல்லாத மலர்கள்...
வீணாய் போன பேருந்து பயணங்கள்...
சாப்பிட மட்டுமே பயன்படும் இதழ்கள்...
யாரையும் புகழாத வார்த்தைகள்...
முழுமை அடையாத என் கருவறை பயணங்கள்..
இரவு பகலாக இன்பமின்றி...
நீ இல்லாத
நாட்களில்...
இந்த காற்றும் உன் காதலும்
ஒன்றுதான்
நான் உயிர் வாழ...