இழப்பு...
என்
உடல் பொருள் ஆவி
அனைத்தும்
நீயே கண்ணா...
நீயில்லா
நாள் இதில்
நீரில்லா மீனடா..நான்..
நீ
தீண்டிய விரல்கள்
வெறும் வேலை செய்யும்
இயந்திரமாய்
என் இருதயத்தை
பற்றுதடா..
பனிபடர் கூந்தலை பார்
பாலைவனமாகி போனதடா..
இருக்கிறது
என்று சொல்ல மட்டுமே
இருக்கும் இரு மலர்கள்..
பூக்கா
இதழ்கள்..
என் விலை மதிப்பில்லா
பூர்வீக சொத்துக்கள்...
பாழடைந்த பாதைகள்..
நீ
இன்றி
நானும்..இந்த வீட்டில்
ஒரு பொருளாய்..
இந்த நாள்
வருமென்று
முன்பு
தெரிந்திருந்தால்...
நான்
கருவிலேயே
காணாமல்
போயிருப்பேனடா...
இந்த
குருதி ஓடும்
வெற்றுடல் வேதனையில்
வாடும் நோவு..
இப்புவியில்
இனி எப்பெண்ணுக்கும்
வரலாகாது..
கண்ணா..
என் கண்ணீரே..
கற்பகிரத்தில் இருக்கும் கல்லே...
நீ என் வாழ்வை
வேடிக்கை
பார்த்துக் கொண்டே
இரு..
என்
சேலைகள்
கண்ணீர் துடைக்கும் நூல்கள்..
என்
சமையல்
ஊண்குளத்தில் குப்பைகள்..
என்
இரவல் புன்னகை
இரத்தமில்லா உடல்கள்..
என்
செயல்கள்
பங்கேற்கா போட்டிகள்..
என்
படுக்கைகள்
செத்துப்போன மரங்கள்..
என்
அறை கண்ணாடி காட்டுவது
நீ விட்டுச் சென்ற எச்சில்கள்..
என்
நெற்றிகள்
கோடையில் தார் சாலைகள்..
என்
கன்னங்கள்
சிதிலமடைந்த சிற்பங்கள்..
என்
எண்ணம்
வண்ணமில்லா தூரிகைகள்..
நீ இல்லா
நான்...
சாதாரணமாக சொன்னால் சவம்..
சாவின்றி வாழும் சடம்..
(முடிக்க..முடியா..முடிவு கவிதை இது.என் முடிவு வரும் வரை...)

0 Comments