நீ படிக்க மறந்த
என் கவிதைகள் பாவமடி..
நான் பாவியடி..
உன் கோவை இதழ் பூவடி..
என் கவி மணக்கனும் தானடி..
உன் இருவரி தந்தே
வாசனை கூட்டிப்போவேன்டி.....
உன் பார்வை தீண்டாமல்
பசியில் தேடுது...உன்
இதழ் சுழித்தே சுவைக்காமலே
இதயம் சுருங்கியே போனது..
இருவரிக் கவிதைகள்
இம்சையை
இரவல் கேட்குது..
இதழ்வழி ஏச்சுக்கள்
பொருள் இல்லாமலே போனது...
தோன்றிய கற்பனைகள்
தொடராமல் போனது....
மூடிய சுவைகள்
முடிச்சுக்களை அவிழ்க்கவே ஏங்குது..
எதுகை வேண்டும்
மோனை வேண்டும்
என் கவிதைகளில் நீ கூட வேண்டும்...
காதல் இன்றி நானும் இல்லை
காதலை விட்டே
தூரம்போக
விருப்பமில்லை..
கொஞ்சலாய்
கெஞ்சலாய்
காமத்தை தூரம் தள்ளி வைப்போம்..
கட்டில் குழந்தையை
தூங்கவைப்போம்..
தொட்டிலை தூக்கியே
மார்பில்
கட்டிவைப்போம்...
காரிருள் நேரத்தில்
காதலை மட்டும் விட்டு வைப்போம்..
நம் காதோடு சொல்லிவைப்போம்..
கனவுகளும் வேண்டாமடி
கன்னத்தில் முத்தமிட்டு
கற்பனை மட்டுமே
செய்து வைப்போம்..
முத்தம் இன்றி போனாலடி..
என் உயிர்
சத்தமின்றி போய்விடுமே...
என் சாதனைகள்
உன் கன்னக்குழியில் இடம் கேட்டே
போராடியே
உயிருக்கு துடிக்குதடி...
கண் முடிகள் காணுமடி
காதலும் வாழ ஏங்குதடி..
காதல் கொடி படர்ந்தடி..அது உன் கொடி இடை கேட்குதடி...
கொடிகளில் பூத்த
காய்கள் பெருத்தே
என் கண்ணை திண்ண பாக்குதடி...
காதல் இன்றி நானும்
தண்ணீர் இல்லா மீனும்
விக்கலில்..என்
காதல் உன் விழிமுனை
சிக்கலில்....
தாவணியே
தாடகையே
மறுமொழி பேச்சு வேண்டாம்...
நீ கடத்தும்
கடக்கும்
மாதங்கள் வேண்டாமடி...
நாட்களும் நீளுதடி...
ஆடி முத்திரையும்
ஆவணி முகூர்த்தமும்
பாதைக்கு தெரியுமோ..
பாதை தேடும்
பயணம் செல்ல
ஏங்கும்..என்
பசிக்கு தெரியுமோ....
சித்திரையும் முத்திரையும்
உன் பார்வை படவே காத்திருக்கும்....
பூக்களே உயிர் பெறுங்கள்
வார்த்தை வாசனையால்
என்னை தின்னுங்கள்...
உன் உள்ளத்தில்
கள்ளமும் வேண்டாமடி...
கவி எழுத
கண்ணதாசன் வேண்டாமடி.. அந்தக் கம்பனும் வேண்டாமடி...
வார்த்தைக்கு வார்த்தை உன்னை வர்ணித்தே
வகுப்பெடுக்கும்
வைரமுத்து வேண்டாமடி..
நானோ
வார்த்தைகளுக்கு உள்ளே
உன்னை வகைப்படுத்த போகின்றேன்..
வகிடுக்கு நடுவே உன்னில் வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்...
காதலில் கொல்லாதேடி..
காதல் இசைந்தபின்
காமம் பொல்லாதேடி...
என் கண்ணிமை தள்ளாதேடி
தவறே..தவமே...
தாவணிப்புறமே...
அழகே...அருகே..
அறிவியல் பாடமே....
அடங்கா அவய ஆழியே
ஆசைக்கு என் உயிரே
கூலியே...
குடமுழுக்கு செய்த
குமுதமே...
குங்கும சந்திப்பே..
குரை காண இயலா
குற்றமே...உன்னை
படைத்தவன் செய்த
பிழையே...என்னைக்
கொன்றது
அவன் படைப்பு கலையே....
பஞ்சத்தில் குஞ்சம்
உன் இடையில்
இடம் கேட்டே
தஞ்சம்...
கேரள பலாவோ...
மறைத்த நிலாவோ...
தூரிகைகள் வரைந்தே மறைத்த
காவியமோ...கற்பனையில்
கஞ்சமோ...இல்லை..
வார்த்தையில் பஞ்சமோ..
உன்னை வர்ணிக்க...
வார்த்தை தேடி
தமிழை கல்லெடுத்தே
எரிகிறேன்...காய்த்த
தமிழ்மரத்தை
பழம் விழவே பார்வையில்
குறிவைக்கிறேன்...என்
இமைபட்ட இடத்தை
கவிதையாய்
கவனமாய்
குறிவைத்து எறிகிறேன்..
விழாமலா
போகும்...அந்த
கல்லோ..இல்லை
அவள் சொல்லோ....
அவை சேர்த்தே
உப்போடு
சுவைக்க...
இமைகீழ்
இரு வரிகளில்
இருப்பும் வைத்தே....
காத்திருக்கிறேன்....
காதலோடு மட்டுமே....
உனக்கு கவிதை எழுத...
வார்த்தைகள் சேர்த்தே..
கவிதை எழுத நேரமின்றி
காத்திருக்கிறேன்...
என் தமிழே...
இலக்கியமே...

0 Comments