விண்ணுக்கும் மண்ணுக்கும்உன் விரல் தீண்டா
நேரத்தில் விரிசல்..
விளக்கிற்கும் விட்டிலுக்கும்
உன் இமை தீண்டா
நேரத்தில் விரிசல்..
கனவிற்கும் நனவிற்கும்
உன் நா தீண்டா
நேரத்தில் விரிசல்..
காதலுக்கும் கடவுளுக்கும்
உன் கருப்பு தீண்டா
நேரத்தில் விரிசல்..
விரிசல்கள் ஏனய்யா
இதற்கு விளக்கங்கள் தேவையா..
வேட்டிக்குள் மாட்டிக்கொண்டு
மூச்சுக்கு திணறும்
முந்தானைக்கு முத்தமிடு..
வேகாத மனதோடு
வெயிலோடு விறகாகும்
விரகத்திற்கு தீயிட்டு
காதலோடு பற்றவை..
பற்றட்டும் நம் காதல்
பாலைவனத்தில் வியர்வை போல..
வினா தேடும் விடையோடு
விதி வரை பயணிப்போம்
விரிசலின்றி..

0 Comments