கருத்தமிளகு காரமாகும்
கடித்து சுவைக்கும் நேரம்
புறம் ஈரமாகும்...
இடிச்ச அரிசி தரமாகும்
இனிப்பு நோய்க்கு மருந்தாகும்..
மண்ணில் முளைச்ச பூண்டு ரசமாகும்
மணக்கும் போது விசம் போகும்...
தலையறுத்த வாழைஇரத்தம்
அமிர்தமாகும்
குடிச்சுப்பாரு கல்லும் அபூர்வமாகும்....
தேனும் மாவும் உணவாகும்
உண்ணும் உடலோ இரும்பாகும்...
குப்பையில் விளையும் மருத்துவமே
தமிழனின் வாழ்வில் தனித்துவமே.
பாரினில் கண்டோமோ
தமிழர் வாழ்க்கை போலே..
தமிழனின் உணவே மருந்தாமோ
தமிழனே மருத்துவனாமோ...
தமிழ் மருத்துவம் கொள்வோமே
இந்த தற்கொலை
மருத்துவம் தவிர்ப்போமே.....

0 Comments