கண்காணும் சேமிப்பில்
குறைகளைந்தால் மனம் சேரும்
சேமிப்புகளோ மயானம்வரை
மனம் நிறைக்கும்...

........................
காதலின்  சேமிப்பு கிடங்கிற்கு
அவர் துணை கண்சாடை தானே
சாவி. ..

.......................

கட்டும் கயிற்றை
தாலியாக்குவது
என் மாந்தர் இன நம்பிக்கையே..

............................

நேரமும் நிற்கும்
ஒருநிலையில்
மனதில்
ஆற்றல் இல்லாத போது...

...........................


கண்காணும் கழிவுகளை
சேமிக்கும்
குப்பைக்கிடங்கு
மூளை...