முகமூடி மனிதர்களின் கூடாகும்
கூடா நட்பால் இது கூடும்..
கூடா விடயங்களை துதி பாடும்
கூடவே வருவது போல் மனம் திண்டாடும்..

முன்னே தெரியாதவரை உறவென்போம்
முகத்தோடு முன்னேவர சுமையென்போம்
முழுவதும் முடிக்காமே கருத்திடுவோம்
முரணான வார்த்தைகளை பயிரிடுவோம்..

பிடித்தது பீயானாலும் நக்கிடுவோம்
பிடிபடாதது பிணிமருந்தேயானாலும் நாவால்சுட்டிடுவோம்

பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்
பிறப்பால் சாதி வணங்கி வாழ்ந்திடுவோம்..

பெயருக்கு பின்னே பட்டங்கள் கண்டோம்
காதலின் பெயரைச் சொல்லி கண்டதை தின்றோம்

காதலைச் சொல்லவே சுற்றுகிறோம் - அவள்
கணவனின் கண்ணீரை மறக்கிறோம்...

புகைப்படங்களோடு முத்தம் செய்தோம்
புகையும் நெஞ்சங்களோடு யுத்தம் செய்தோம்..

வீதிப்போராட்டத்தை நாம் பகிர்ந்தோம்
அவர்கள் உணர்வை பகிராமல் நாம் படுத்தோம்..

கட்டிலில் படுத்துக்கொண்டே நாம்
கதை சொன்னோம்
ஆட்சிக்கட்டிலில் தூங்கும்வோருக்கு
காவலானோம்...

கற்பென்றால் கதறியே பதிவிட்டோம்
கள்ளகாதலை கண்டிக்க மறந்திட்டோம்

கண்களால் காதல் செய்தோம்
கண்கானா முகத்தை அழகென்றோம்..

உடைவிலக்கும் உலாவல்களுக்கு உணர்விட்டோம்
உதட்டால் பேசியே உதவிட்டோம்..


முகநூலில் நான் நாமானோம்
முகவரி மாற்றி நம்மை மறந்தோம்.....