தாய்...
உன்னை
நினைக்கும்
போது
முதலில்
நினைவில்
வருவது
என் அன்னை முகம்...
உன்னைக்
கடக்கையில்
தோன்றும்...நீயும்
ஒருநாள்
என் தாய்க்கும் மேல்தானென்று...
ஆனால்
எனக்கு மட்டும்
ஏன்
தோன்றவில்லை.
என் தாயைப்போல்
உன்னையும் கட்டிக் காப்பாற்ற...
உனக்கு
உயிரில்லை என்பதாலா..இல்லை..
இல்லை..
நீ தான் எங்களுக்கு
உயிர் கொடுத்தவள்.
பின்பு ஏன்...
தெரியவில்லை...
நீ
எங்களை
பேச வைத்தாய்
படிக்க வைத்தாய்
ஓட வைத்தாய்
ஆடவைத்தாய்
ஒருநாள் இந்த உலகை ஆளவும் வைத்தாய் - என்
தாயிக்கும் தாயானாய்..என் தாயே..
என் அருமை
அரசு
ஆரம்ப பள்ளியே...
இனிமேலாவது
உன்னையும்
கட்டிக்காக்க
வேண்டுமடி...
உன்மடியில்
எங்களைப்போல்
நாளைய சந்ததியும்
வாழ வேண்டுமடி...
என் அரசாங்க ஆரம்ப பள்ளியே..
நீ இல்லையேல் இன்று
நாங்கள் இல்லை...
இவ்வுலகில்..
உன் தசையற்ற
உடலைக்கண்டு
வாடி நிற்கின்றோம்..
உன்னைக்காக்க
போதிய
சக்தியில்லாத ஜீவனாய்...

0 Comments