அழகாய் ஒரு கவிதை
ஆவி பறக்க நான் சமைத்தேன்
அளவில்லா ஆனந்தத்தில்
ஆசையோடு படையலிட்டேன்
பார்க்கும் கண்கள் சுடுமோ
சுவைக்கும் நாவுக்கு சுகம் தருமோ
சுனையற்ற ஊற்றாய் கவிழுமோ
காட்டாற்று கனலாய் பெருகுமோ
பெருமை சேர்க்குமோ
நானறியேன் பார்வைகளே..
பார்க்கும் இடமெல்லாம்
பார்வதியார் நாட்டியமே
ஏனோ புடவைகள் காணவில்லை
புழுக்கள் கண்களில் காணுகிறேன்
புரியாத மொழிப்பாட்டு
அது பாட்டல்ல ஏமாற்று
அதனோடு தலையாட்டும் கூட்டம்
ஏனோ மதுபோதை தாலாட்டாம்..
குறைகள் ஆங்காங்கே
நிறைகள் நிம்மதி கெடுக்க
பண்பாடும் நம் பிள்ளை
நம் கண்முன்னே குடியோடு இடையாட்டும்
வருங்காலம் கண்ணெதிரே
கருமமாய் தெரிகிறதே..
ஏனாம் இப்படியாம்
இரவில் கூத்தாடும் குடிமக்களாம்
இதை கற்றுத் தந்ததுவாம்..
ஆண் பெண் சமமென்பார் வேண்டிட
சமநிலையை இவ்விடம் கண்டீரோ..
சரக்குகள் விற்பனைக்காம்
மணச்சந்தையில் ஏமாற்றுவாரோ இல்லை
ஏமாறுவார் யாரோ..
குதிகால் செருப்பு தாங்கி
குலமகள் குதிக்கையிலே
குலப்பெருமை இங்கே
எங்கு போச்சு மேன்மக்கா..
போதையில் தப்பு செஞ்சா
மன்னிக்கும் மாராப்பு
மனசை மட்டும் கேட்டுப்புட்டா
மணம் முடிக்க பணத்தையல்லா
தேடுறதே....
மேடைக்கு மேடை பேசி
மேல்நாட்டு நாகரீகம் தின்னுறோமே
குடியில் தமிழில்லை
குடியிருப்பில் மட்டுமே
தமிழ் தேடுறோமே...

0 Comments