நான் உன்னிடம் பேசாமல்
இருக்கலாம்
ஆனால்
உன்னை மறந்துவிடவில்லை...
உன் குரல்
கேட்காமல் இருக்கலாம்...
ஆனால்
குதூகலமாய் இல்லை...
உன் கை தீண்டாமல் இருக்கிறேன்..
தீவாக வாழ்கிறேன்...
இந்நாளில் விடியலே
விருப்பமின்றி...
கொடுமைகள் தானடி
காற்றடிக்கும் தூரம் இருந்தும்
காற்று தீண்ட
விருப்பமின்றி
பூட்டிய மனதோடு நீயோ..
உன்னை
புரிந்து கொள்ள முடியாது நானோ..
மார்கழி குளிரில்
மாராப்பே செத்தாலும்
மனதோடு பூக்காமல்
மருகிக்கொண்டே வாழ்கின்றோம்...
இதை காலம்மாற்றுமா..
நாம் காதலோடு களித்தே வாழனும் மாற்றம் ஒன்றே மாறாதது
என் மனதைப் போல
உன் மனசு மாறும்
மாறனும்..
விரல்கள் பத்தும்
விடியலுக்காய் காத்திருக்கு...

0 Comments