படிக்கட்டில்
இரயில் பயணம்..
எங்களைப்போல்
போனதுண்டா..
காற்றில் ஆடும்
என் தாவணியும்..அதை
கட்டுப்படுத்த
அவன் கைவிரலும்...
கட்டுப்படா.என்
கூந்தலும்..அதை
சீர்படுத்தியே சிரிக்கும்.
அவன் சிரிப்பும்..
இருவரும் அருகருகே
அந்த படிக்கட்டில்
ஈருடல் ஓருயிராய்
அடி மனம் படபடக்க
அந்த படிக்கட்டும்
சுவையாக..சுவையாக்க..
சுவைக்க..
அவன்..முத்தமிடும்
நொடி அறியாமல்...
சுவைகூடிய
முத்தத்தில் எங்கே
நம் கைநழுவுமோ..என்ற
பயத்தில்...
ஒவ்வொரு
மின்சார கம்பமும்
எங்களை கடக்கையில்
முத்தமிட
வேண்டுமென்ற
கண்டிப்போடு..
காதலர் நாங்கள் சென்ற
காதல்பயணம்...
கல்யாணத்திற்கு முன்..
முத்தமிட்டு
மூழ்கையில்
எட்டிநின்றே வேடிக்கை
பார்க்கும்
வாடிக்கையாளருக்கும்
தெரியாமல்
முந்தானையில்
முகம் புதைத்து..
போங்கள்.. எனக்கு
வெட்கமாய்..வருகிறது..
அது ஒரு கனாகாலம்..என்
காதல் நினைவுகள்..
அவனோடு...என்
கல்யாணம் வரை
தொடராமலே முடிந்ததில் தான்
பெரும்வியப்பு...எனக்கு..


0 Comments