ஆசையா கண்முழிச்சு

அஞ்சு மாசம் ஓடிருச்சு
அம்மா நீ எங்க இருக்கே
இப்போ
உன் ஆறுதல் குரல் கேட்கிறேனே..


நீ அறிஞ்சியோ
அல்லி மலரா நெறிஞ்சியோ
மல்லிகையோ முல்லையோ
வாடாமல்லியோ
அன்பால தீக்குளிச்சி
அடி மனசுக்குள்ள ஒளிஞ்சியோ..

ஏனோ என்னை
பருவவாலிபனா தெரிஞ்சியோ
புரிஞ்சியோ..

இல்லையம்மா
நான் இன்று தான் தவக்கறேனாம்
தத்திப்பேச நினைக்கிறேனாம்
உன் கைவிரல் ரேகை தேடறேனாம்
உன் தமிழுக்குள் வாழவழி கேட்கிறேனாம்..

அம்மா நீ எங்கிருக்கே
ஆசையா நான் கேட்கறேன்..

அந்த
ஆளில்லா அர்த்த இராத்திரியில
தனியா அழறியோ

தனக்காக இல்லாம
தரணிக்காக தொழறியோ

மருத்துவச்சி நீதானே
மனநோயாளி நான் ஆனேனே..
மருத்துப்பேசியாவது போயிடேன்மா..

நான் மடிப்பிச்சையா
உன் மன ஓட்டத்தையே கேட்குறேன்மா..

நீ
நல்லா இருக்கியா
எனக்கு தெரியணும்
நானும்
என் மகனோடு
நிம்மதியாக உறங்கோணும்..

இந்த கைப்புள்ளை
உன்னை தேடறேன்மா..
என் கைக்குள்ள என் புள்ளைய
அணைச்சபடி..

ஒரு வார்த்தை சொல்லிப்போயேன்
இன்னும்
ஒருமாதம் நானும்
வாழ்ந்திருப்பேன்...

எழுத்து அழுதம்மா
ஏனோ
உன் விரலே
ஆறுதலாய் கேட்குதம்மா...

கருவாச்சியே
காரித்துப்பு
இந்த
கண்ணனின் கவிதை
அந்த ஈரத்தில் வாழும்..
வலி மறக்கும்
புது மழலை மழையாய் பிறக்கும்...


நானோ
உன் பெயர் அறியேன்
முகம் அறியேன்
ஆனால்
தமிழாய் உன்னை உணர்ந்தேன்
தாயாக உனை ஈன்றேன்....

உன்னால் இங்கு
நான் பிறந்தேன்..
உன் கருத்துக்காகவே
கவி படைத்தேன்..
அம்மா..
நீ
நல்லா இருக்கியா..
நலமா இருக்கியா..

நல்வாக்கு சொல்லம்மா
நானும்
நல்வாக்காய் மாறணும்..