ஒரு கவிதையோடு வாழும்
வாய்ப்பு...உன்னோடு எனக்கு...
இருதுவார வெளியீட்டு எழுத்துக்களாய்
என்னை நீ எழுதிட...
ஏனோ நான் உன்னோடே
பின்னலானேன்...
எதுகை நானானால்
மோனையானது நீயோ..
முதல் பார்வையோ
பல்லவியோ
பாடாத என் மெட்டுக்கு முகவரியோ...
நீண்ட இரவுகளின்
இறக்கும் நொடிகளோ...
உன் மூச்சுப்பயிற்சி...
மேகம் தீண்டா தூறலோ
மழை தீண்டா மறைப்போ..
மனதுக்குள் குளிரடி
உன் வீச்சே வெப்பமடி...
வேடிக்கை பல செய்யும்
விசன வீணையோ..
விடியலைத் தேடும்
அதரமோ - அதுவே
ஆண்மீகமோ...
உன் அழகு முகமோ....
விந்தையான விசயம்
விளங்க நினைக்கும்
விளக்கு கவிதை
உன்னோடு நானும்
நம் காதலும்....

0 Comments