எனக்கு பொய்கள்
சொல்லத் தெரியாது...
அவள் கண்களை தவிர
வேறெதையும் நான் கண்டதில்லை..
அவள் மூக்கின் கீழுள்ள மச்சத்தை
மட்டுமே ...
என்ன அது என்று
ஆராய்ச்சி செய்து பார்த்தேன்...
அதை தாண்டி பார்க்கவில்லை..
அவள் விரல்களின்
அழகை மட்டுமே பார்த்தேன்..
அவ்விரலை என்னை தீண்டச்சொல்லி
கேட்கவே இல்லை...
அவள் கொலுசை மட்டுமே
பார்த்தேன்..அதைத்தான்டி..
எதையும் பார்க்க வில்லை..
அவள் கழுத்தின் வளைவில்
வளரும் தங்கடாலரை மட்டுமே
பார்த்தேன்...
அதைத்தாண்டி
எதையும் யோசிக்கவில்லை..
அவள் காதுகளின் மடல்களை
மட்டுமே பார்த்தேன்..
அதைத்தவிர வேறெதையும் பார்க்கவில்லை...
அவள் காலடியை
மட்டுமே
பார்த்தேன்...அது கடந்து வந்த
கஷ்டங்களை பார்க்கவில்லை....
எப்போதோ
தெருவில் என்னை கடக்கும்
அவளை கண்ணால் மட்டுமே
பார்த்தேன்...
என் பார்வையால்
அவள் படும் கஷ்டங்களை
பார்க்கவில்லை...
மன்னித்து..விடு..
உன் மனதார என்னை..

0 Comments