தொலைதூரம்
ஒரு குரல் கேட்கிறது..தூது விடும்
குறுஞ்செய்தி
குறும்பான பார்வை..
ஏக்கம் கொள்ளும்
கற்பனைகள்..
காத்திருந்த நாட்களெல்லாம்
உன் மனதை காணவே..
என் மனமும்
உன் மனமும்
ஒன்றையே நாடுதே..
என் செயலும்
உன் செயலும்
காதல் என்றே கதறுதே..
காதணிகள் முதல்
காலடிகள் வரை
அர்த்தமாய் மாறுதே..கண்ணா..
உன்னை கண்டனொடி
உருமாற்றம்
உள்ளமெல்லாம்
நீர் தேக்கம்..
அனுதினமும் உன்னை
நீராட கேட்டு நிற்கும்..
காதலும் இது தான்
கனவும் இது தான்...நான்
கட்டிய கோட்டைகளின்
காவலனும் நீதான்
காதலனும் நீ தான்..
என கதறி அழ
மனம் ஏங்கும்..அந்த நொடி..
என் முந்தானை
ஓரத்தில்
ஒரு இமை இடைவெளியில்
மடி இழுத்து..
என் முகம் பார்த்து கேட்கும்..
..அம்மா.....நான் பெரியவனா ஆயிட்டா..உனக்கு என்ன வாங்கி தரணும்..
பால் குடி மறந்த
என் மடி நிறைத்த என் மகன்..
என் முந்தானை கனவெல்லாம்
என் கண்ணீரோடு
சேர்த்து துடைத்து
எறிந்து..
என் மகனை
கட்டியணைப்பேன்..
எனக்கு எதுவும்
வேண்டாமடா..கண்ணே
நீ மட்டும்.. உன் சிரிப்பு மட்டும்
போதுமடா..
நான் இராணிபோல
வாழ்ந்திருப்பேன்...
அவனை தூக்கி..
நாங்கள் பம்பரமாக சுற்றுவோம்..
சாட்டை அவனாய்
அவன் சுற்றும்
பம்பரம் நானாய்...

0 Comments