எனக்கு நீதான் வேணும்
நித்தமும் சண்டையிட வேண்டும்சண்டைக்கு
முடிவை தேடியே முத்தமிடவேண்டும்..
கண்களைச் சுற்றியே
காதல் சொல்ல வேண்டும்...
இமை சேர்த்து
காதல் என்ற புத்தகம் எழுத வேண்டும்
கண்மூடிப் படிக்க
இதயங்கள் இணைக்க வேண்டும்
காதலியாய் நீ வேணும்
கழுத்தில் மாலையிட நான் வேணும்...
ஓட்டமும் நடையுமாக
உன் வெற்றியின் பின்புறத்தில்
நான் வேணும்....
நெற்றி பொட்டு முதல்
நிலம் தின்னும் இடம் வரை
நானே ஆள வேண்டும்
உன்னை ஆராய வேண்டும்
ஆராய்ச்சி முடிவுகள் ஆனந்தமாய் இருக்க வேண்டும் ....
அலை கடல் போல
காதலை அள்ளி பருக வேண்டும்
அதை கண்களால்
குடித்தே தீர்க்க வேண்டும்...
அந்த கடற்கரை மணலில்
காலடி பட்ட இடத்தில்
பெயர்களும் எழுதலாம்..
இருவருக்கும் போட்டி வைத்து கைகளில் மண் அள்ளி
அதன் எண்ணிக்கை
அளவிற்கு முத்தமிட்டே
முடிவை தேடலாம்...
முடிவு வரும்வரை முடிக்காமலே
தொடரலாம்...
எனக்கு நீதான் வேணும்
நீ மட்டுமே வேண்டும்...
உன்னை பார்த்த நொடிகளில் பார்வைகுருடானேன்
நான் பார்க்கும் இடமெல்லாம்
உன் முகமே தெரிந்ததுமே
அது பார்வை குறைவில்லை
பருவ குறை என்பதை
தெரிந்து கொண்டேன்...
வா கண்ணா
காதலில் சேரலாம்
கவிதைகள் எழுதலாம்
கழுத்தில் தாலி கட்டி
கனவை நனவாக்க
இல்லறம் தொடங்கலாம்....

0 Comments