வசைபாடும் வாழ்க்கை
வளைக்கிறது....முதுகு தண்டுவடம்
மூளையைத் தின்னும் வரை வலிக்கிறது....
காலை கடன் கடமைக்கு
அழைக்கிறது ...
கடனுக்கு வட்டியும் தலை தின்றே விழிக்கிறது....
வார்த்தையில் சொன்னா
வலிமை இல்லா மூன்றெழுத்து..
வாழ்ந்து பார்க்கவும் வாழப்பிடிக்கா நான்கு எழுத்து...
அடிமேல் அடி வைக்கும்
ஒரு கூட்டம் ...
அழுதாலும் கண்ணீர் வெளியே தெரியாமல் வாழும்
ஒரு கூட்டம் ....
இது தான் வாழ பிடிக்கா
நான்கு எழுத்தோ...
வாழ்வுக்குள் பிடிபட்ட அந்த
மூன்று எழுத்தோ...
கடவுளும் இருக்கின்றானா -அவன் காசுக்குள் மட்டுமே
குடி கொண்டிருக்கின்றானா - இல்லை காசு உள்ளவன் மட்டும்
கடவுளை தத்தெடுத்து வளர்க்கின்றானா..
தறிகெட்டு ஓடுது
கேள்வி கேட்கா மனது... தடுமாற்றங்கள் ஏனோ வருது...
உழைப்புக்கு ஊதியம் இல்லை உழவனுக்கு உணவில்லை
குடிமகனுக்கு குடிக்க நீர் இல்லை காரணம் எதற்கும் காசு இல்லை...
இது யார் செய்த பாவம்
யார் செய்த பாங்கு
யார் செய்த பணம் ...
உழைப்பை எதைக் கொண்டு கணக்கிட்டான்
பணமாக ....
பசியாற்றும் உணவை எப்படி கணக்கிட்டான் பணமாக ...
உண்மை உரைக்கிறது - இந்த உலகுக்கு புரிகிறதா ...
ஒரு கிலோ அரிசியும்
ஒரு ரூபாயும் சமம் என்றால் அரிசிக்குப் பதிலாக ஒரு முறை - அந்த பணத்தை தின்று பாரேன் ...
இது அரசியலா
ஆளுமையா
அடிமையாக்கியே
ஆளும் வர்க்க சூழ்ச்சியா -
இதைக் கேட்க ஆண்டவனும் இருக்கிறானா ....
இனிமேல் ஆள்பவனும்
கேட்பானா .....
வாயைத் திறந்து கொண்டே
வரும் புதியவர்கள் -
வாய்க்குள் பணத்தை வைத்து திணிப்பதும் - ஏனோ
பிணம் போல ஆகிறார்கள் ....
போதுமடா சாமி -
நீ இருக்கியா - அந்த இடத்தை
முதலில் காமி....
உன்கிட்ட
நாலு வார்த்தை கேட்கணும்...
வாழ்க்கைய படைச்சது
நீயானால் - அதில்
வறுமையை
உண்டாக்கியது...யார்..?????.

0 Comments