பூவோட தாலாட்டு
புன்னகையால் நீ கேட்டு
காதலோடு பாடும் பாட்டு
காற்றோடு கலந்துதான்
காதுலயும் கேட்கணுமே...
காதோரம் நாயனமும்
காதலோடு பூக்கனுமே....

கண்மூடும் வேலையில
தாயோட தாலாட்டு
தாய் போல நீ இருந்தால்
தாயே நீ தான் தாலாட்டு..


கவலையெல்லாம் நிகழட்டும்
நீ கதை பேசி சிரிச்சாலே
அது கலைஞ்சு போகட்டும்..

மௌன ராகம் நீ பாட
மனசுக்குள்ள வேதனையே
மாலை சூடிய  மத்தாப்பே - என்
கண்ணோரம் கதகதப்பே...

கற்பனையே
காதலியே
கற்பூர பொம்மையே
கைப்படா நிலாவே
கார்மேக பூங்குழலே..
மரகத வீணையே
மாம்பிஞ்சே...

நான் மடியில் போட்டு தாலாட்டவே
மாசக்கணக்கா காத்து இருக்கேன்...

மனசெல்லாம் பூ பூத்து
மல்லிகையே உன் முகத்தை மனசோடு சேர்த்து வச்சு
மாலையிட காத்திருக்கிறேன்...

வாசனை தீருமுன்னே - என்
வாசலுக்கு வந்திடம்மா..

வட்டிக்கு வட்டி வாங்கி
என் காதலையும்
தீர்த்திடம்மா...

என் கண்ணுக்குள்ள
தூண்டில் போட
தாரமா வந்தவளே....

தடாகமாய் நானிருக்க..
தயக்கம் ஏன்...
நீந்தி குளிக்க....

உசுரை மட்டும் கேட்கிறாயே...
உன் உடலில் உறுத்தும்
கயிற்றை கழட்டிடவே....

உடலோடு சேர்த்து தாரேன்...
உறவுகொள்ள தயக்கமேனோ....

என்றோ ஒருநாள் செத்துப்போவேன்...
அது இன்றே நடக்க
ஆசையடி உனக்கு....

ஆத்துல நீர் வத்தி....
நீயும் வருவ...அப்ப
இந்த
ஆத்துக்காரனோட
அருமை புரியும்....

என்மேல் கருணை கொல்ல
வேண்டாமடி.....
காதல் மட்டுமே போதுமடி...

நீ இல்லா..இப்போது
புலம்பறேனே
தன்னாலே...