மனிதனே...
மதிஊனனே..
அறிவீனனே...
ஆட்சி அதிகாரமே
உன் தலையென்றால் - அதையும்
ஆண்டவன் 
அவனியில் இல்லையென்றாகுமா....

ஆதி முதலே
தோலுரித்த
திராவிடன் சட்டைக்குள்
வண்ணத்தை தூவிடலாகுமோ...
கருமை மாறுமோ....
உன் எண்ணம் ஈடேறுமோ ஈடேற்றுமோ....

வலியவரும்
நாய்போலே..
வாலாட்டி வந்திட்டாய்...
எலும்பு துணுக்கு தாரேன்...
கட்டிக்கொண்டே ஓடிடு....

கவள சோற்றில் கைவைக்கும்
முன்னால்
கலப்பை பிடிக்கவே கற்றுக்கொள்...
கலப்பின மாடொழித்தாய்
நீயே கலப்பினமானாய்...
இன்றோ நடை பிணமானாய்...


தமிழா உன்னை
மாலையிட்டு மயானமேற்ற
மதம்கொண்ட கரைவேட்டி
காத்திருக்கு...
கணக்கு பண்ணி காசுவாங்கியே
நீ...
கள்ள ஓட்டு போட்டுப்போ...
உன் கல்லறையில்
உன் சந்ததி அலறுவது
நாளை கேட்கும்...
அனுஅனுவாய் இரசித்துப்போ...


ஆண்டவன் படைப்பில்
ஆயிரம் அற்புதம்...
மானிடப்பதரே. .
உனக்குத் தெரியுமா...
உனக்கு பிறந்தவன்
அறிவில் ஆற்றலில்
உன்னைப் போல் இருப்பானென அறுதியிட்டுச் சொல்ல முடியுமா...

இன்றே
நீ துவங்கு
உனக்கு நீயே தலைவன்...
தமிழனே  தலைமையானவன்...

ஆயிரம் சொற்களில்
அடங்காத அறிவு
அவனியில்  தமிழனுக்கு - அது
ஆதவனுக்கு
நிகராகுமாம்..

சுட்டெரி அவனை
தீட்டு என்றவன்
நீட்டும்
நீட்டு - தேவையா..யோசி...

உன் வயிற்றை நிரப்ப
அவன் பசி தீர்த்தால்
உன் வயிறு நிரம்புமா....

வியர்வையும் மூத்திரமும்
தனித்தனி தானே...
அவனுக்கு அது புரியுமா .. இல்லை
இரண்டுமே
ருசிக்குமோ...

அவன் உண்டு கொழுப்பதால் மட்டும்
உலகம் உயிர் பெறுமா..
உய்க்குமா...

தமிழனுக்கு பிறந்தவனே
எழு...
இல்லையேல் - நாளை
அழு..
போகப்போவது உன் மானமே...

நீட் டும் கைகளை அறு
இல்லையேல்...
அறுதியிட்டு நான் சொல்வேன்...
நாளை
காசுக்கு கருவறுக்கும் கூட்டமே
கருவை சுமக்கும்...

உன்னை மீண்டும் கருப்பனாக்கி
கழிவறை ஏற்றும்...

காரணம் தேடாதே
காரியமே தேவை..

தமிழனென்ற ஒருவன்
நீயானால்
நீட்டை நீட்டாதே  - என
நீட்டு
உன் நாவை....