பார்வையில் பனிக்குடம்
உடையும்...
உடைக்குள் உதறலெடுக்கும்..
உருட்டிய தேகம்
உள்வாங்கும்....
ஊமை விழிகள்
மௌனமாகும்....
மனதிற்குள்
மத்தள சத்தம் கேட்கும்...
தினம் உன்னை காண்கையில்
திமிரும் அழகாகும்..
திமிராய்
என்னை தாக்கும்....
உணவின்றி
உயிர் தவிக்கும்
உதட்டுக்குள் நிலநடுக்கம்....
பூவிரல் கோலமிடும்
என் பின்பாதை சீராகும்....
சிறப்பான
இடம் தேடும்...
இமை தேயும்....
இரவலாய் உன் இருதயம் கேட்கும்...
கா.....ம் இதுதானோ...
தானியங்கி தடம்மாற்றியோ
உன் இணை
இருப்பிடம் தேடணுமோ...
இரவுக்கு வெள்ளையடித்தே
இருவரும் வெட்டவெளி வீதியிலே
இரட்டை முகமதியை வெட்டி
இமையாலே கூறிடுவோம்...
தூக்கம் வரும் நேரம்வரை
துகிலின்றியே தூரிடுவோம்..
துக்கத்தை கக்கத்தில்
தூரிகட்டி தாலாட்டுவோம்....
வியர்வை குழிக்குள்ளே
வியப்பாய் தேடிடுவோம்...
விட்டில் பூச்சிபோலே - அவ்
விடம் தின்றே பசி மறப்போம்...
பரிகாசம் தானடி
பாரிஜாத பூவடி
பரமனுக்கு கிடைத்த
பார்வதி நீயடி...
பூவடி புத்தகத்தில்
முதல் முத்தம் நானடி...
முழுவதும் அசையற்ற
எழுத்தை எழுதும் விந்தையடி
விரல்களடி...
ஆறடி சந்தனமோ
அம்மி மிதிச்ச தேனிலவோ....
இன்று
ஆவணி முதல் நாளோ...
அரியணை ஆட்சிக்கு
அரிக்கு அவசரமோ...
ஆளாயோ..
ஆ....தரவு தாராயோ...
ஆண்சூடும் பூவே....

0 Comments