உ

ஓம் கரு...கரு ..கருப்பா...
ஓங்காரா..கொடுவாயா...
சுடுகாட்டு ...பலிகாரா...
மண்டை ஓட்டு மாயோனே..
சங்கிலி புங்கிலி கருப்பனே...
கருமலையாணே...
வா..வா...வா...


எட்டு வையடா எங்க கருப்பா
எதிரிகள் இல்லையடா எங்க கருப்பா
முட்டும் பிணியும் முடிந்திட சனியும்
குட்டிப் புலிகளும் கொடிஅரிவாளும்
பட்டை முகமும் வேட்டு கருப்பும்
பாவிகள் போலிபோட்டு
எங்க கருப்பா ...எட்டிவாடா எங்க கருப்பா..

பாரா முனியும் பரம்பரை பகையும் வெட்டி முடித்து தலைமுறைகாக்க..

வா..வா..வா..


சுடுகாட்டு பேயும்
கொள்ளிவாய்ப் பிசாசு...
உன் குரல் கேட்டே மிரண்டு ஓட
எட்டுவச்சு வாடா
என் பாட்டனே  கருப்பா ..

சடை முடியும் முறுக்கிய மீசையும் வங்கக் கடலும் வரிப்புலி ஜாதியும் வம்சாவழியடா
எங்க கருப்பா

நெற்றிப்பொட்டில் உன்
நினைவேந்தி
எட்டும் வைத்தால்
பயமும் வருமா.

காத்து கருப்பா
கருணை  காவலா..
உன்பிள்ளை அழைக்கிறேன்
ஓடி வாடா...தாங்கிப் பிடிடா
என் குல கருப்பா..

வா...வா..வா..


வாழா பிணமும் வாழ்ந்த பிணமும்
உன் நிகர் இல்லையே எங்க கருப்பா..

கருப்பு கண்களிரண்டும்
கவலையை விரட்டும்
கத்தும் பல்லியும் ஆறுதல்
சொல்லும்..
மனதில் நினைக்க
வேண்டுதல் பலிக்கும்..

இருட்டில் விழியாய்
எம் குல கருப்பா
என்னை ஏற்றிச் செல்லடா
என் குல கருப்பா..
தூங்கும்  முன்னே
உன் பெயர் சொன்னால்
துக்கங்கள்
ஓடிடும்
எங்கள் கருப்பா ..

வா..வா..வா..

உன் குரல்
வேண்டியே
நித்தமும்
அழைத்தால்..
பல்லியாய் மாறியே
சத்தமும் இடுவாய்...

என் கவலை போக்கிடவே
நித்தமும் வருவாய்...

குறும்பாடும் ஆட்டுக்கறி சோறும்
அளவுடன் கேட்பாய்
எங்க கருப்பா...

வா...வா...வா..

தலை பலி கேட்கும்
எங்க கருப்பா..
தலைப்பிள்ளைக்கு
உன் பெயர் எங்க கருப்பா ..

வாசல் எலுமிச்சையில்
நெருப்பாய்
எங்க கருப்பா..

தீவினை  நெருங்காமல்
காப்பாய்.. எங்க கருப்பா..

வா..வா...வா


காத்தாய் கருப்பாய் நீயும் வருவாய்
கவலையைப் போக்கிட
கணத்திலே வருவாய்..

கார்மேக கருப்பா...
கார்மேக கருப்பா...

இப்போ சத்தமாய்
பதில் சொல்லு ..எங்கள் கருப்பா..
காக்கும் தெய்வமே..எங்க கருப்பா..
உன்னையே வணங்கினால்
செய்தவினை தீரும்...
எங்கள் கருப்பா...

சொல்லில் கொல்லும்
எங்க கருப்பா...
என்னை காப்பாற்ற
வாராய்....எங்க கருப்பா...

வா..வா...வா..






(தயவுசெய்து இரவில் யாரும் தனியாக இதை படிக்க வேண்டாம்)