கனாவிலே நேற்று
காரிருள் மேகமும் கருநாகமும் துரத்தவே கண்டேன்நானும் துடித்தேன்.
அலறிய நானோ அதை
அவயத்தில் புதைத்தேன்...
கனா
தெளிந்ததா தெரியவில்லை
ஏனோ நா எழவில்லை ...
என்னுள்ளே பலபல மாற்றம்..
காரிருள் மேகம் யாரோ
அந்த கருநாகம் யாரோ
ஏன் அவயத்தில் புதைத்தேன்
எனக்குள் புகைந்தேன்
முற்றும் புரியவில்லை
முழுவதும் தெளிவில்லை..
மெதுவாய் எழுந்தேன்
முன்நெற்றி துடைத்தேன்
குளித்த உடுப்பை கிழித்து எறிந்தேன்..
பார்க்கும் திசையெல்லாம்
பனி படர கண்டேன்
மெல்ல அடி எடுத்தே
நடக்கையில்
ஓவியத்தில் நானும்
மத்தியாய் இருந்தேன்...
இது ஆற்றுமோ
என்னை தேற்றுமோ..
தூரத்தில் ஒரு குரல்
ஆணையிடவே
அடிமடி தேடி
அதன் பின்னே நடந்தேன்..
மறந்தது
மனசு பதறுது
தினமும் மெல்ல சாகிறேன்
காற்றில் மிதக்கிறேன்
கவனமாய் நடக்கிறேன்...
கூவும் குயில்களை
குலதெய்வம் என்றேன்
ஆரிய ரத்தத்தை
அம்மா வென்றே அழைத்தேன்...
தூங்கிய கற்களை
துணைக்கு அழைக்க துடித்தேன்
துயரம் மறந்து
பனியை தாண்டியே
பட்டொளி வெளிச்சம் கணடேன்..
அந்தப் பாவை முகமே
பார்வையில் தெரிந்தது..
இதுதான் காதலோ
இதயம் கேட்டது..
நொடிக்கொருமுறை
அளவாய் துடித்தது..
கண் விழித்தேன்...
இமை மூடவில்லை
எந்த குழப்பமும் இல்லை
கூடிய நொடியில்
கவியும் பிறந்தது..
இதுதான் காதலோ
காதலின் தொல்லையோ.
கனாவின் அர்த்தமோ
கடைசி மட்டும்
தெளிவில்லை
தெரியவில்லை....

0 Comments