உன்னைத்தேடியே

என் பயணம்..

என்னுள் நீ..

என் இமைக்கும் இமைக்குள்ளும் நீ..

என் கைவளை சிணுங்கலில் நீ..

சிரிக்கும் கொலுசொலி..நீ..

பாதி இரவு தூக்கமும்..நீ..
தூக்கத்தில் வரும் கனவும்..நீ..

ஊடலும் நீ
கூடலும் நீ..
மொத்தமாய் என்னைப்பற்றிய
பிணியே..நீ.தான்.. என்
காதலா..
காதல் பிணியே..பிணியின்
மருந்தே..

கண்மூடும் முன்னே வரும்
கவிதை..இதைப்போலே..
நீயும்..நான்
கருவாடு ஆகி..
இடுகாடு செல்லும்..முன்..
வருவாயா..

இயலாமல் போனால்..
முடிவிலியாய்..என்னை நீ
தொடரவும்..வேண்டாம்..
முத்தமிட்டே என்னை
உயிர்க்கவும் வேண்டாம்..

எனக்கே எனக்காய்..
ஒரு துளி..நீர் விட்டுப்போ..
என் கல்லறையில்..

அது உன் காதலின்
மடலாய்..நான்
ஏற்றுக்கொள்வேன்...