ஏதோ ஒண்ணு எழுதணும்..
ஏன் அது நீயாவே இருக்கணும்...
நினைவுக்குள்ள
நிலைச்சிருக்கியா...இல்லை
நிலவாக மலர்ந்திருக்கியா...
மலருக்குள்ள
கலந்திருக்கியா..இல்லை
வாசம் வீசி சிரிச்சிருக்கியா...
சிரிப்புக்குள்ள
சிறைபிடிச்சியா...இல்லை...
சிந்தைக்குள்ளே
சிற்பியானியா....
சிற்பங்களில்
உயிர் கொண்டாயா...இல்லை
உயிர் கொல்லவே
உருவம் பெற்றாயா...
உருவத்தில்
உணர்வானாயா....இல்லை
உணராமலே
உலகை வென்றாயா....
காதலே...
காதலிக்க நீ பிறந்தாயா..இல்லை..
காதலர்களை பெற்றெடுத்தாயா...
பெற்றெடுத்தே என்னை
நீ வளர்த்தாயா...இல்லை..
என்னை பெற்றெடுக்கவே
நீ பிறந்தாயா...
வார்த்தை இல்லாமலே
நானோ....
ஏதோ எழுதறேன்..
உன்னையே நினைக்கிறேன்...
உன்னோடு கலக்கவே ஏங்கறேன்...
காதலின்றி
இருதயம் துடிக்குதில்லே..
உன்ன எழுதாம
என் கவி ருசிக்குதில்லே....
காதலே உனக்காக
காத்திருக்கிறேன்...
காகிதப்பூவில்
கண்கொண்டு
காதலை தீட்டி வைக்கிறேன்...
வாசனை இல்லாமலே
போனாலும்.....
வாடாமலே உனக்காக
காத்திருக்கிறேன்...
ஏனென்றால்
நான் உன்னை காதலிக்கிறேன்...

0 Comments