ஊண்குளம் நிரப்பவே
உயிர்வலி எடுக்குது..உண்ணு கொழுத்தவனுக்கு வயிறு
எங்கே இருக்குது...
அங்கம் அழுகிறேன் - அங்கவலிய
உன்கிட்ட சொல்லுறேன் - உன்ன
பரிசா தந்து போனவன காணலியே
நீ பாலகனா இரந்ததால
பேரும்கூட வைக்கலையே.....
பட்டினிச் சாவுக்கு
பாகமும் அழைக்குதே - நானோ
பகலிரவு பாராமல்
நித்தமும் அழுகறேன்...
கூட்டணி கட்சிக்குள்
குடுமிப்பிடி சண்டையாம்
குளத்துக்கும் கொக்குக்கும்
நித்தமும் நடக்குதாம்....
சமாதானம் பண்ண போனா
சனியும் பிறக்குறான்..
சனி கூட
மனம் சேர
மடியெங்கும் அழுக்கு தான்....
பார்க்கும் பார்வை எல்லாம்
கற்புக்குள் புதையுதாம்..
பசி என்று வந்து விட்டால்
பாதி உடை இறங்குதாம்...
மாராப்பு சேலை மட்டும்
மந்தாரமா இருக்குதாம்
மறைச்சத விற்கும்போது
மனசும் கருகுதாம்...
கூழோ கஞ்சியோ
குடிக்கவும் புடிக்குதாம் - கை
புடிச்சவன்
போன நாள் முதல்
நித்தமும் இதுவே நடக்குதாம்...
மதிகெட்ட
மானுட மரிக்கொழுந்து நானடா
மதி கெட்டு போனேனாம்...
குடிகாரனுன்னு தெரிந்சும்
கூடுவிட்டு கூடுபாயும்
வித்தைகற்று பாய்ந்தேனாம்
அவனில் கலந்தேனாம்
இன்றோ
வருந்தியே என்ன பலன்
கண்டேனாம்.......
பொழுதாகிப் போனாலே
என் பொழப்பு
தருசாகிப்போகுதடா...
தெரு நாய் எல்லாம் ஓடி வரும்
மார்கழி மாசமாட்டம் கூடிவரும்
ஏதோ சொல்லுது
எனக்குள்ள
நான் எட்டு வச்சு நடந்தால்
தப்பு என்ன .. .
வயிறு பெருசா
வரம்பு பெருசா...
வரப்புக்கு மேலே
வளர்ந்து வரும் கதிரு பெருசா..
கருணை கொலை செய்ய - எனக்கு மனசு இல்லையே..
என் மாராப்பில் மறைச்சே
மனம் கோணாம உன்ன வளர்ப்பேன்...
உனக்கு தெரியுமா
உப்பிட்ட உடல் வாழ்க்கை
வயிற்றுக்கு சோறு போட
வாய தொறக்க மாட்டாங்க..
நம்ம வாழ்க்கை பத்தி
பேச நாக்கு மட்டும் நீளுமடா..
வாயை தொறந்தே
எவனாச்சும் வரட்டும்
நாக்கை இழுத்து வச்சு
அருப்போம் வாடா...

0 Comments