வானத்தின் துளிகள்
நிலத்தை தழுவும் போது

நிலத்தை முத்தமிட்டே
நதியாகும்
சாக்கடையாகும்
புற்களுக்கு உணவாகும்
பூசைக்கு தீர்த்தமாகும்

புண்ணிய நதியாகவும் மாறும்

நாமும் அதுபோலவே....

உன்னை குறைசொல்லும்
பலரை வெறுப்பதைவிட...
உன்னை நேசிக்கும்
சிலரை நேசிக்கலாமே....