சூனியமாய் வாழ்க்கை
சுற்றிடும் சக்கரங்கள்
சூழ்நிலைக்கைதிகளாய்
நாம்....
விலங்கிட்டோ ஆங்கே
விடுதிகளில்
வீட்டிலில்லா சுகம் காணும்
கேடுகெட்ட வழக்கம் இங்கே..
கூலோடு கஞ்சியோ
குடிக்க அரசின் அரிசியோ..
தீபாவளியோ திருமணமோ
திடமாய் வீசும் கிடாக்கறியோ
வீதியிலே நமக்கு.....
வாரம் தவறாமல் கிடைக்குது இங்கே
கழுத்தோடு சங்கிலி பறித்த
சண்டாளருக்கு..
சாதி வெறியோடு
சாமானிய மனிதனை அங்கே
சாம்பலாய் மாற்றிவிட்டு
சாதித்த கரைகள் இங்கே
கூத்தாடிக்கிடக்கிறதாம்
வண்ண தொலைக்காட்சியோடு..
சிறைக்குள்ளே சொகுசாம்
சிரித்து மகிழும் திரைப்படமாம்
வெளியே வேகுது வெயிலாம்
சொன்னவரோ பலரிருக்க..
இதுவா தண்டனை
தனித்தனி வாடகையில்லா
வாழ்க்கையா தண்டனை..
கொல்லணும்னு தோணும்போதே
சிறை வாழ்க்கை சொகுசாக தோணுதம்மா..
ஏன் அவன் அழவில்லை
தலை தாழ்ந்து மானமிழக்கவில்லை
காற்றிலே கையாட்டி
முத்தத்தை காற்றிலே
பறக்கவிட்டான்..
கம்பிக்கு வெளியே
கண்களோ
கடமை முடிந்த திருப்தியில்...
ஏனிந்த கேலிக்கூத்து
இந்த கேடுகெட்ட தேசமதில்..
குதூகலமே தண்டனையா
குடிக்க கஞ்சியில்லா காளைகளுக்கு
ஆங்காங்கே வந்துபாரும்
மதுவோடு வழி மறைக்கும் கூட்டங்களை..
கை நீட்டி காசுவாங்கி
கழுத்தை அறுக்க காத்திருக்குது
கூட்டங்களாய்...
இது குற்றமாய் தோன்றவில்லை
அவருக்கு கூலிக்கு வேலை இதுவாம்..
நிரபராதி விசாரணையில் சாவதும்
சிறைபட்டவன் சிரிப்பதும்
என்ன வென சொல்வீரோ...
குறையை களையுங்கள்
கண்டோரே. .இதற்கு தான்
காவல்துறை உங்கள் நண்பன்
என சொன்னீரோ...


0 Comments