கண்ணா..நீ..
காதலனாய் இருந்தாலும்
கணவனாய் இசைந்தாலும்
கட்டியவள் கல்லில்லை அவள்
கருக்கொண்ட உயிராகும்...
தீதொன்றில் பெரிதென்ன சிறிதென்ன
தீயாய் சுட்டிடும் சொல் கூட
சுகம் தீய்க்கும்..
பூமேனி மிதிபட்டு கர்சிக்கும்
பூனையும் புலியாகும்
பூக்களுக்குள் ஒளிந்திருக்கும்
பூநாக விசம் கொள்ளும்....
முழுதும் கேளாமலே
முடிவு சொல்லும் மூத்தோரும்
முன்பின் அறியாமல்
முகம் மறுப்பதும் மனம் கொல்லும்.....
கூந்தலின் நீண்டமுடி
குத்திட்டு இமை கண்டால் கொண்டவருக்கே
கொற்கை உணவோடு உருமாறும்..
பாதம் படர்கையில்
படரும் கொடி படுகையில்
பாதைமேல் நற்கோபம்
பாத விரல்களும் பொய்சொல்லும்...
ஏதோ ஒருநிமிடம்
உயிர் கொள்ளும் ஒரு கோபம்
உணர்வுகளை அது தின்றே
உடலை மண்ணோடு மண்ணாக்கும்..
மறந்தும் மடிப்பிச்சை
மாராப்பில் வேண்டாமே
மாங்கல்யமாய் தீண்டிடுவாள்
மனம் செத்தால் என்னாகும்....
கூடுமானவரை
கொண்டாளை கொண்டாடு
கோவிலில் காவி கட்டி
கோபுரத்தைப் பார்த்தாலும்
கோவில் கருவரையும்
கோமாதா கருக்குழிக்கு ஈடாகாது - நீ
கொண்ட உயிர் கொண்டாடாது..

0 Comments