தோற்றம் காண்கையில்
தோழியாகிறான்..

சமையலறைகளில்
அன்னையாகிறான்...

கவலை கொள்கையில்
காதலனாகிறான்...


கட்டிலில்
என் குழந்தையாகிறான்...

கண்விழிகளில்
கவிதையாகிறான்..
கட்டியணைக்கையில்
கவிஞனாகிறான்..

எழுத்துப்பிழைகளை
எதுகை என்கிறான்...

மோன நிலையில்
என்னை முத்தமிடுகிறான்..
முக்தி அடைகிறேன்...

தினம் தினம் அவன் காதலால்..நான்..

காதலால் தான்..நான்..