உலகம் உனக்காய்

வளையும்
நீ வளைந்து கொடுக்காதிருந்தால்...

நிழலும் ஒழியும்
நீ
ஒளியாயிருந்தால்....

வானம் வணங்கும்
நீ
மதியாய் இருந்தால்...

வறுமை வற்றும்
நீ
உழைப்போடிருந்தால்...

உலகம் வியக்கும்
நீ
ஆசை துறந்தால்....

உயிரோடு இருப்பாய்
நீ
தமிழ் உணர்வோடு இருந்தால்...

தமிழை கொள்
தமிழனாய் வெல்...
தரணி போற்றட்டும்...