குறை சொல்லிச்சொல்லியே இங்கே
இன்றுகுறை சொல்வதே
குறையாகிப் போனது..
குறை சொன்னோம் நாம் இங்கே
கழுத்துக்கு மாலையாய் சங்கிலியும்
இடுப்புக்கு இரும்பு போன்று தங்கமும் இருவரின் அழகை கூட்டும்
பட்டாடைகளையும்...
குறை சொன்னோம் நாம் இங்கே
காற்றை விற்றாராம்
எல்லோருடைய கழனியையும்
கொள்ளையடித்தாராம்..
குறை சொன்னோம் நாம் இங்கே
குரைத்த நாய்களுக்கு
பதவிகள் தந்தாராம்
பாராளுமன்றமதில் வாரிசுகளுக்கு பதவியும் பெற்றாராம்...
குறை சொன்னோம் நாம் இங்கே
குழி பதிக்க வந்தாராம்
வழிகளை வலியாக்கி
விவசாயம் கொன்றாராம்...
குறை சொன்னோம் நாம் இங்கே
குடிக்க பழக்கினாராம்
குடிகெடுக்கவே குடியை திறந்தாராம்..
குறை சொன்னோம் நாம் இங்கே
காணும் யாவிலும் கையூட்டை
காவல் கற்பழிப்பை
நீதி அலைக்கழிப்பை
கண்கெட்ட போதில் தான்
காரணங்கள் நாம் கண்டோம்...
குறை களைய ஒருவாய்ப்பு
உன் முன்னே வந்திடுமே
உன் விரலில் கருப்பு வைத்தே
கதறியே அழுதிடுமே...
நீதானே என்ன செய்தாய்
குடித்து வலி மறைத்தாய்
குடிக்கு வழியை மறந்தாய்
குத்தகைக்கு நாட்டைவிற்று
குடிமகனாய் வாழுகின்றாய்..
பின்னர் குறை மட்டுமே
ஏன் சொன்னாய்
காசு தின்னும் பிணமே நீ..
வாக்குக்கு காசு வாங்கி
உன் வாரிசின் வாழ்க்கையை அடகு வைத்தாய்..
கத்தி மட்டுமே கரையாது
உன் பாவம்
கரை வேட்டிக்கும் தெரியாது..
நீ கண் விழித்து பார்க்கும்வரை
உன் கவலை தீராது..
கவனமாய் வாக்களி
காசு வாங்கி வாக்களிக்காதே...

0 Comments