நீ காதோரம் சேதி சொல்ல
வந்தது தெளிவுஇனி உன்னை கட்டிக்கற்பழிப்பதாய்
முடிவு..
ஏனோ நீ
என் தாயை உனதென்றாய்
என் உணர்வை உயிரென்றாய்..
என் உறைவிடத்தை
உலகென்றாய்
என்னையும் நீ மனிதனென்றாய்
தலை நிமிர்த்தி தமிழனென்றாய்..
சாதியை அழி என்றாய்
சாதிக்க அதுவே வழி என்றாய்..
வாய்ப்பேச்சில் வாழ்க்கையை சொன்னாய்
விழி திறந்தால் வழிபிறக்கும்
முறையும் சொன்னாய்..
வாக்குக்கு கையேந்தா
அரசியல் சொன்னாய்
அரசியலுக்கே நீ தான்
இலக்கணம் சொன்னாய்...
வாடா தம்பி
வாடா என்றாய்
நான் தலைவன் இல்லையடா
உன் தமிழ் இரத்தம் என்றாய்..
நீ தலைவன் இல்லை என்றாய்
அதனாலேயே இன்று
தலைவனானாய்...
உன்னைப்பற்றி பேசுவதும்
உன்னோடு பயணிப்பதும்
தமிழனாய் எனக்கு பெருமை..
எம் குலப்பெருமை நீங்கள்...

0 Comments