நாளொன்றைத்தேடி
நவிழும் மலர் சூடிநான் பார்க்க பூத்தவளே...
நறுமுகையே
நற்றமிழே
நானறிந்த
நாத்திகமே என்னுள்
நாளமுடிச்சுக்களில்
நர்த்தனமே உன் இமை
நாட்டியமே...
நானாக நானில்லையடி
நானோ நீயானேன்
நாம் சேரும்
நாளை எண்ணி
நடுஇரவில் விழிதின்றேன்..
நடுக்கமாய் குளிர்தேடி
நடுவில் உன் விரல்தேடி
நமட்டு சிரிப்போடு
நானும் நாணினேன்
நாண் பூட்ட நல்கினேன் - உன்
நல்வரவிற்காய்
நகம் தின்றேன்....
நாட்டிய பாதரட்சைகளில்
நளினம் கண்டேன்..
நான் தின்ற பாத்திரத்தில்
நகக்கீரல் கண்டேன்..
நாணம் தாங்குமோ
நான் தீண்ட தாளுமோ
நடுவில் நகைக்குள்
நடுக்கமோ
நகமில்லா விரல் கேட்டேன்..
நாண் வெட்டும் நகம் கேட்டேன்...
நான்
நாமானோம்...
நாண் பூட்டியே
நடக்கின்றோம்...
நாட்டோடு நற்றமிழாய்
நாவோடு நகைப்போடு...
நல்வரவிற்காய்..
நாளைக்காய்....
நா சுவைக்காய்...கனியும் வரை...
நாம் கனியாகும் வரை....

0 Comments