உனக்காய் எழுதுகையில்

உளியும் உயிர்கொள்ளும்
உயிர் மட்டும் இமை தின்ன
உடல் உயிர் வேண்டி போராடும்

நேர்கோட்டு அசைகள்
நிதானத்தை பதம் பார்க்கும்
நிராயுதமாய் என்னை மாற்றி
நிசப்தமாய் நீ நகைப்பாய்..

குருதிக்குள் குதூகலிப்பு
வியர்க்கவைக்கும் உன் சிரிப்பு
பேசாமல் நீயிருந்தால்
போதையேற்றும் இதழ் குவிப்பு

மண்டைக்குள் மாந்திரீகம்
மாயம் செய்த உம்பாகம்
மாயமானாக நானிருந்தால்
மரணம்கூட மகிழ்ச்சியடி..

ஓராண்டாய் உன்னைச்சுற்றி
மக்கிப்போச்சு உன்நெனப்பு
மனசுக்குள்ள
மஞ்சள் ஒண்ணு நட்டுவைச்சேன் - அது
மாராப்பு இடம் வேண்டி
மனசில்லாம தவமிருக்கு..
வாராயோ வெண்முகிலே
வண்ணநிலா காத்திருக்கு...

உன்னழகை பாட
உயிருக்குள் போராட்டம்
உளிகொண்டு என்னுயிரில்
உன் பெயரெழுதி அது நீட்டும்...