என் வற்றிய வயிரும்

கொட்டிய கூந்தலும்..
கசப்பதில்லை... எனக்கு
நீ காட்டும் அன்புக்கு முன்..

பாலை நில படுக்கையும்..
பாதி ஒழுகும் கூரையும்
காயப்படுத்தியதில்லை..
என் கருப்பா...
என் கணவா..
உன் கருப்பு பீடி வாச
முத்தத்தில் திளைப்பேனடா..

உண்ண உணவின்றியும்
உன்னோடு நான் வாழ்ந்தால்
அதுவே..என் சொர்க்கமடா..
கருப்பா..