தனியாய்

ஓசையில்லா ஒத்தடங்கள்
ஒருமையில் இனிமையாகும்...


ஒருவரி விசனங்கள்
விம்மும்
கரிக்கும்...

விட்டத்தை நோக்கிய பார்வைகள்
விழியோரம் சுடும்...

புடைத்த மனசு
படையலாய் காயும்
கடவுளாய் நீ வந்து
பசியாற...

பசலையில் பட்டினிகிடக்கும்..
இந்த நாளில்..

இமை கேட்கும்
இளமைக்காலங்களில்
நீ
எங்கிருந்தாய்..
என்னவனே...
என...

தாலியில்லா நானோ
தாம்பத்யம் இழந்து
தாம்புக்கயிற்றில் தொங்கி
தரையில் கிடக்கையில்..

விழியோரம் ஓலமிடும்
உன் விழி வலியை கண்டு...