சிறு குறுந்தொகை இருப்பே

ஆட்சிசெய்வதே உன் பொருப்பே..
இரும்பு நெஞ்சில்
இருமாப்புடன்
ஈன்றவள் உன் தாயே
தாய் தமிழே..
உன் சிறப்பு.


நீ
பகலவன் விழிகொண்டு
இருளை விரட்டியே...

நீ காணும் வழியை
கானா நெறியை
கால்நடை பயணமாய்
காட்டு நெருப்பைப் போல்
தீண்டும்  யாவையும்
தீயாய் மாற்றடா...

திமில் பிடித்தே அடக்கிய
திமிர் கொண்ட காளைகளா
திராணியை  வெளிக்காட்டி
தரணியை வெல்லுங்களா....

ஊனோ
இரத்தமோ
தோலை மறைக்கும் உடையோ
உண்பதுவோ
உடுப்பதுவோ
உன் அடையாளம் இல்லையே
உன்னை அடக்குவது இல்லையே உன்னை அடக்க நினைத்தால்
அடக்க முடியுமா
ஆட்கொள்ளவும் முடியுமா..
நீ அடங்கா காளையடா
தமிழ் மண்ணில் பிறப்பெடுக்கும் புல்லுக்கும் புரிதல் உண்டாம்..

புலனாகா புல்லை
புசிக்கா பசுவுக்கும் பதில் உண்டாம்
வீசும் காற்றும் விந்தையாம்
தலை நீட்டி பகை வந்தால்
பகை முடிப்பது
உன் செயலாம்.....

பகை ஒன்று முளைத்திருக்கு
பணம் தின்றே பிழைத்திருக்கு..
கால் தொட்டே கவிபாடுது
கட்டளையை மறந்தே
மெரீனா போனது..

கத்திய கண்களும் இன்றோ
காசப்பாக்குது..
மனசுல வாழ்க்கை கசக்குது..
நீயே முடிவெடு...
உன் முகத்துக்கு நேரே வரும்
பகை நோக்கி நீயே குரல் கொடு..
இனி உனைகாக்க
உன் விரலே ஆயுதமாம்..
ஆண்டவனும் இல்லை..
ஆள தலைவனும் இல்லையாம்..
கருணையில்லா கடமையே
பணத்தின் அடிமையே
ஆட்சியாம்...இதில்
நீதி  எங்கிருக்கு...
வாழு வாழவிடு...இது
நேற்றோடு போயாச்சு..
இன்றோ
நீ வாழ யாரை வேண்டுமானாலும்
எத்தனை பேரை வேண்டுமானாலும்
கொல்லலாம் என்ற
தலைமையே தலைவிதியாம்..