மன்னிப்புக் கடிதம்..
அய்யகோ
நான் தப்பு பண்ணிட்டேனோ
அம்மா....
நான் தப்பு பண்ணிட்டேனோ..
அன்றொருநாளோ
அறியா பருவத்திலே....
ஆசையா நானும்
ஆண்டவனிடம்
வரம் கேட்டேனாம்...
வாய் தவறி கேட்டுப்புட்டேனாம்...
உன்ன மாதிரி
பொண்ணு வேணும்னு
கேட்காம விட்டுட்டேனாம்...
மாற்றாக
உன்னையே மகளாக
கேட்டுட்டேனாம்...
மதிகெட்டு போயிட்டேனோ
நான்....
சின்ன வயசுமுதல்
உன்ன அன்பா பாத்துக்கவே
நான் நினைச்சேனாம்...
உனக்கு சோறூட்டி
பாலாட்டி
தலை நீவி குளிப்பாட்டி
தலைவாரி பொட்டுவைத்து
பூச்சூட்டி
அழகு பார்க்க ஆசைகள்
கொள்ளையாம்.....
அத்தனையும் செய்யவாம்....
நீயோ குழந்தையாக வேணுமுன்னு
நானோ
குழந்தையா உன்னையே
கேட்டுப்புட்டேனாம்.....
அறியா பருமதில்
நீயே என் மகளாக வர
வரம் கேட்டேனே - அந்த
அறிவுள்ள கடவுளிடம்
அறிவற்ற முட்டாளாய் நானோ...
ஏனோ இன்றைக்கு
நான் வேண்டியது கிடைத்திடுமோ..
உன்னை வேறு உருவில்
நான் பார்க்க கூடிடுமோ...
எனக்காகவே நீ
என்னை விட்டுப்போக
கூடிடுமோ....
நீ இனி என்னவள்
வயிற்றில் பிறந்து வந்தாலும்
நீ என் தாய்க்கு நிகராவியோ...
எத்தனை பிறவி எடுத்தாலும் - அது
என் தாய்க்கு ஈடாகுமோ...
இருபது வயதில்
இணை பிரிந்து - எங்கள்
உயிரோடு இணைந்த இணைப்பே..
உன்னை நான் இழப்பேனோ
என்னுள் நான்
மரிப்பேனோ....
உயிரற்ற என் இமைகொண்டு
உன் உடல் காண கூடிடுமோ..
வேண்டாமே அம்மா
நீயாகவே
நீ வேணும்.....
வேண்டுமோ
உன் போலொரு பெண் குழந்தை...
நான் வாய்தவறி
தவறாக கேட்ட வரமோ..
இன்று
உன் உயிர் பறித்திடுமோ..
இன்றோ
கடவுளையெல்லாம் நானும்
கேட்கறேன்...
எனக்கு தாய்போல் மகள் வேண்டுமே....
என் தாயோ என்னோடு
இறுதிவரை வேண்டுமே...
அந்நாளில்
உனக்கு வலிக்குமுன்னோ
நான் ஆறுமாதத்தில்
பாலை மறந்தேனாம்...
இன்றோ
பால் ஊற்றே...
தாயே....
உன்னை மண்குடிக்க கூடிடுமோ..
பாசத்துக்கு நானும்
ஏங்கிச்சாகத்தான்
ஏனிந்த பிறப்போ..
ஏனிந்தவளர்ச்சியோ...
வாழ்க்கை முடியும்வரை
வாழவே உன்மடி வந்தேனாம்.
இன்றோ
உன்னை ஆளறேனாம்...
பாசங்கு செய்து
பாசத்துக்கு ஏங்கி
எனக்குள்ளோ அழறேனாம்....
கேட்காத வரமெல்லாம்
கொடுக்கும்
என் தாயி பராசக்தியே..
எனக்கொரு வரம் கொடு...
அம்மாவா..
நீ வேணுமே...
என் அம்மாவோடு அம்மாவாய்
எனக்கு மகள் வேணுமே
இருவரும்
என் கூடவே வர வேணுமே...
வாராயோ வரம் தாராயோ...
கத்தினானும் சாகறேனோ
புத்திகெட்டு கத்தறேனோ...
கழுத்து வரைக்கும்
கயிறு பற்றி
எமனோடு
எமலோகமும் போறியோ...
என் ஆசைய நீ நிறைக்கவோ
நீண்ட பயணம் போறியோ...
என்னை நீயும் மன்னிச்சிடம்மா
என் அறியா வரத்தை தீர்த்திடம்மா
ஆனதை மறுக்க முடியலையே
அழுவதை தவிர வேறு தெரியலையே...
அய்யகோ...
நானும் கத்தறேனே...
அம்மா ..
என் கண்ணை துடைக்க
நீ
எழுந்து வருவியோனு
ஏக்கத்தோடே......
அழறேன்..