அசையின் ஆசை..நீயடா...
என்
அசைக்கு ஆசையோ
உன்மேல...
எனக்கு
கூடாம போனா
அரளிச்செடிமேல ஆசையோ...
மனசில ஆசை
வானமேகம் போல
வளர்ந்திருக்கு..
என்போல....
மோகத்தில் மஞ்சக்கன்னு
முகத்தில் பூத்திருக்கு..
மாலையை தீண்டத்தானோ
மாராப்பு மறைஞ்சிருக்கு - மஞ்சளில்
மனசுக்குள்ள நீ வந்தே
மாராப்பு தீட்டாச்சே....
மானமுள்ள பெண்ணுக்கோ
மரிக்கொழுந்தும் வீணாச்சோ..
பாக்கு வெத்தலை தின்னே
என்ன பாத்துப்போன மண்ணே...
நான் மருகுறனே
மயங்குறனே...
உன்னை நெனச்சு கிறங்குறனே...
மஞ்சநெத்தி மரத்திலயும்
மாராப்பை மாற்றி
தூறிகட்டி ஆடிருக்கேன்..
மாமனே உன்ன தேடியே
மனசு வெடிச்சும் அழுதிருக்கேன்...
அம்மாவை பெத்த - (என்)
ஆத்தாவுக்கு ஆசைதான்
உன்னோடு என்னை சேர்க்க...
ஆனதோ என் பொழப்பு
அஞ்சாவது ஆட்டத்தோடே
அம்மணமா முடிஞ்சதே..
அய்யகோ என்ன சொல்வேன்..
அடிவயிறு எரியுதே.......
அன்னக்கி நீ இருந்திருந்தா
என்னோடு
ஆசையோடு பேசியிருந்தா - என்
கைபிடிச்சு
மஞ்சள் வெயில்
மனசில் படர்ந்திருந்தா......
மச்சமாய் நானும்
துடிச்சிருக்க மாட்டேனே...
அந்த மதிகெட்ட
குடிகாரனிடம் மண்டியிட்டிருக்க
மாட்டேனே....
என் மானம் போனதே
என் மணமும் போனதே...
மழைக்கு நான் ஒதுங்க...
என் மாராப்பு தவறானதே...அந்த
மனுசன் மனசு கல்லானதே...
கருவில் சுமந்திருந்தா
என்னை சுமந்தவளா
நினைச்சிருந்தா...
கண்ணை கீழிறக்கியிருப்பானா...
என்னை கையைப் பிடிச்சு
இழுத்திருப்பானா...
கட்டியவள் குறைகண்டிருந்தா
அவனை
வட்டிலில் விஷத்தை வைச்சு
ருசிக்கவைச்சிருந்தா....என்னை
புசிச்சிருப்பானா...
புறம் தீண்டி
குருதி குடிச்சிருப்பானா...
புற அழகை புன்னகைக்குள்
கண்டிருப்பானா......
குடி கெடுத்தானய்யா - என்னை
குத்தமில்லாமலே
நா கூண்டுக்குள்ள
நாற்றமெடுக்க சிறைவைச்சானய்யா...
குடி மட்டுமே காரணமாம்...
கேடு கெட்ட சாதிப்பய
நாக்கு சொல்லுதய்யா...
குடிச்சவன் எல்லாரும்
குண்டி வேட்டி மறந்து செத்தானா...
கூத்தியாளை நினைச்சானா...
இல்லையே...
கூத்தடிக்க மட்டுமிங்கே
குடிப்பவங்க எத்தனையோ....
என் குலங்கெடுக்க குடிச்சவனை
குருதி கொடுத்து பெத்த
வயிற்றை எரிக்கணுமே.....
நாட்டில்
பெத்ததெல்லாம் குத்தமில்லே
குத்தமின்னு யானும்
சொல்லலியே....
குரங்குக்கும் குரங்கு வம்சத்துக்கும்
வேறுபாடில்லாம வளர்த்தாளோ...
வாழ்ந்தாளோ...
அவளைத்தேடி நானே
கேள்வி கேட்டு கலங்கறேனே
கருவில் கல்லைச்சுமந்து
கற்பொம்மையானேனே..
கடவுளுக்கும்
கருணையில்லாம - நானோ
கல்லறை செல்லவும்
கடமை கூடாம...
கல்லா நிக்கறேனே - என்ன நீயோ
மாலையிட்டு கடவுளாக்க
கூடிடுமோ.......
மாமா....
நீயோ நடந்ததெல்லாம் மறந்திட்டியா...
இல்லை
என்னை மரணமாய் கொல்ல
மனசுக்குள்ள புதைச்சே வைச்சிருக்கியா....
ஆசை இருக்கு மட்டும் நானும்
அகலாவே
அக்கல்லாவே காத்திருக்கேன் - நீ வந்து
அசைக்கும் அசைவுக்காக
அவ்வழிநோக்கி வலியோடு
காத்திருக்கேன்...
மாமா...நீங்க
நீங்கா...
மனசோடு வாருமய்யா...
என் மனசோடு சேருமய்யா...
மல்லிகையா நான் மணப்பேன்
மறுஜென்மமும்
உனக்காகவே
நான் பிறப்பேன்.......