பெண்மையே வன்மை கொள்...
கண்ணகியும் மாதவியும்
ஆண்டாளும் அன்னையுமோ
ஆதவனை தீய்க்கும்
விழிச்சுடரது தணலோ
பெண்மையோ...
கொல்லும் கொள்ளும்
கொற்றவை போலே...
கொண்டவன் வாழவே
கொற்றம் தொழுவது மட்டுமே
பெண்மையோ..
சுற்றிலும் முற்கள் கொண்ட
ஒற்றை ரோஜாவோ..
காக்க பயனில்லா
முற்களும் கேடோ...
முற்கள் உண்பதே
சாபக் கேடோ....
பதியமிட்ட இடம்போலே
வளர்வதில்லை - அது
தன் குணம் போலே மலரும்
மணம் வீசும்...
நிறம் கொள்ளும் - அதுவே
பெண்மை..
பார்வைவிரிகையில்
படிப்பு பெறுகையில்
பயணமும் கொள்ளும்
பழக்கம் பிடிக்கையில்
காதலும் கொள்ளும்
கனவு கலைக்கையில்
களவையும் கொல்லும் - அதுவே
பெண்மை...
கருணை போற்றியே
கருவும் கொள்ளும்
கருவை சுமப்பதே
காதலாய் கொள்ளும்
காதலுக்குள்ளும் கற்பு வளர்க்கும்
கற்பு நெறியோடே
கல்லறை செல்லும் - அதுவே
பெண்மை...
ஆணை அடைந்ததும்
ஆறுதலே கேட்கும்
ஆசைக்கு பொய் சொல்லி
ஆனந்தமாய் வாழும்
ஆனந்தம் பெருக்கிட
ஆண்மையும் கொள்ளும்
ஆண்மை தவர்கையில்
ஆணாதிக்க ஆசையை கொல்லும் - அதுவே
பெண்மை.....
தீயை விளக்காய் ஏந்தும்
தீமை காண்கையில்
தீப்பந்தமாய் மாறும்...
தீர்தேவைக்கு மட்டுமே
தீட்டின்றி அவளை
தீண்டிடும் மூடா
தீயதுன் எண்ணம் கொன்று
தீயிலிடு மூடா...
மரணம் வரையுமே - மானம்
பெண்ணுக்கு வழக்கு
விளக்கு கேட்குதே - இன்னும்
விடியலியோ உனக்கு...
மண்போலே மிதித்தெனை
நடப்பதும் ஏனோ...
மண்ணில் உன்னை உரமிட்டவளை
உடுப்பதற்கு மட்டுமே
உய்ப்பதும் ஏனோ...
பிஞ்சென்றும் பாராமல் உண்ணும்
நஞ்சுக்கொடிநரம்பே...
எட்டி நறுக்கவே - பெண்ணே
ஏனின்னும் தயக்கம்...
சட்டமும் சண்டாளனும்
ஆணினமோ - இல்லை
கருப்பு சட்டைக்குள் இருப்பது
பீச்சல் தின்னும் கூலியோ.
கத்தியொன்றும் பயனில்லையோ
பெண்மை கத்தி எடுக்கா
காலம் வரை....
பெண்மையே
கருணையை மறு - அவன்
கருப்பை அறு...
கைவைக்க தோணுமா
அவனுக்கு..ஆணுக்கு..
கத்தும்வரை நீதி கிடைக்காது
நீ அமைதி காக்கும்வரை
துயரம் தீராது....
கண்ணகியாய் கதறி அழும்வரை
நீதி கிடைக்கபோவதில்லை..
அனலாய் மதுரை எரிக்காத வரை..
ஆணுக்கு பயம் தோன்றபோவதில்லை......... .
எழு
ஏற்றமாய் நட
எதிர்க்க
எழும்பும் நாக்கை அறு...
நீ
தமிழச்சி என்ற திறன் கொள்..
தரணியை வெல்லும் திறம் கொள்...
(மது + துரை- போதை,ஊழல் ஆட்சியாளன்)

0 Comments