இன்னும் கொஞ்சநேரம்
பேசலாமா...
கொஞ்ச நேரம் பார்த்து
பேசலாமா...
கொஞ்சி பேசலாமா...
கொண்டவளே - என்னை
கொள்ளவே பிறந்தவளே...
வினாவிடை போட்டிபோலே
இருமொழி
ஓர்விழியில்
விந்தை நொடிகளை
கந்தலாக்கி...
காதலாக்கி
இதழ்மொழியாலே ஒத்தடமிட்டு
ஒட்டலாமா...
நேரத்தை ஓட்டலாமா...
உயிரோடு தேரோட்டமா
ஒரு காதல் செய்வோமா.....
பார்வையில் கருத்தை
பதியவைக்க
பத்து விரல்களை துணைக்கழைத்து..
பட்டினி சாபம் போக்க
பயந்தே துடிக்கும்
பாவிஇவன் இருதய துடிப்பினூடே
பயணமும் போகலாமா...
பசலைப் பார்வையில்
பரிசுகள் பெறலாமா
பாராட்டு கவி எழுத
பண்படுத்தி பயிரிட்டு
பாசத்தால் காதலை விதைப்போமா..
ஆதிரையே எந்தன் மீதியே
ஆசையோடு பேசாயோ...
ஆதரவு தேடும் அடிமைக்கு
ஆணவ காதலை அள்ளித்தாராயோ...
ஆதிரையே என் நித்திரையே
ஆகாச கங்கையே இரவா அகிம்சையே
ஆக்காதல் ஒளி தீண்டா இம்சையே
ஆஅ வேண்டும் எனக்கு....
ஆதலால் காதலியேன் - என்
காதலியே....
அனாதை ஆனேனடி - உன்
இணக்கம் பெறா காதலால்
அன்பின்றி நானடி
காதல் அனாதை ஆனேனடி...
உயிற்ற உடலாவேனடி
உருவ ஒற்றுமை கொன்று
உயிரோடு சேராமல்
உடலானேனடி...
உயிரான உன்னை பிரியேனடி....
உள்ளிருப்பு போராட்டங்கள் என்னுள்ளே
உயிரோடு உன்னைச் சேரவே
உணர்வைக் கொன்றே
என் உயிர் கொண்ட காதல் தேடல்கள்...
உன்னோடே எந்நாளும்
உயிர் பிரியும் நேரம்வரை
உயிரற்ற உடல் தீயும்வரை
உன்னையே காதலிப்பேன்
என்றேனும் கரம் கோர்ப்பேன்
கோகிலமே - என் அகிலமே
ஆதிரையே.....
இப்போது
ஒருமுறை என்னைப் பாரடி
பாரேன்டி...
பார்....
என் காதல் உயிர் கொள்ளும்...

0 Comments