கைபிடித்து
களை பறித்து
கட்டாந்தரையில்
சுகம் கண்டேன்..
உழவனாய் மகிழ்ந்திருந்தேன்..
அன்றோ..
கிழவனாய்
என் முப்பாட்டனாய்...
வால் பிடித்து
பணம் பறித்து
மெத்தையில்
சுமை கண்டேன்....
பணியாளனாய் உளல்கிறேன்..
இன்றோ
இளைஞனாய்
என் பாட்டனின் வாரிசாய்...
ஏனாம்
என்னையே நான்
மறந்தேனாம்....
எனக்கு
அடையாளமே என் தொழில் அல்லவா
அது
உழவு அல்லவா....
ஏனாம்
தின்ன மட்டும்
மறக்கலையாம்...
எனக்கு
அடையாளம்
என் வயிறாகிப்போனதோ...
வாரிசை மறந்து
வயிற்றுக்குள் ஒளிந்து போனதோ..
ஒருநாள்
நானும்
ஒழிவேன் என்பதை
மறந்து போனதோ....
உழனுமே
என்னோடு
என் மண்ணையும்
பண்படுத்தனுமே...
நான்
உழவனாய்
தமிழனாய்
மீண்டும் எழணுமே..
ஏக்கமாய்
கேட்கிறேன்
தாயே..
எனக்கொரு வாய்
சோறிடு - அதை
நானே அறுவடை செய்ய
வழிவிடு...
உழவனை ஆளவிடு....
எம் மண்ணை
தமிழால் வாழவிடு...

0 Comments