சாதனைகள் பலவும்
சாக்கடைக்கு சொந்தமாச்சே..
சாதிய பிச்சையேந்தி
சேலை உரித்து எச்சமாச்சே..
ஏனிந்த காகங்கள்
எச்சம் தின்றே கதறுகிறதோ..
ஏணியாய் மாறாது
ஏப்பமாய் கரைகிறதோ..
காசுக்கா இவ்வாழ்க்கை
ஓட்டு வாங்கி ஓய்வெடுக்க..
ஆயிரம் பணம் சம்பாத்தியத்தில்
மச்சுவீடு கட்டுறான்
கிராமத்துல...
மாடு போல மண்டையாட்டி
மானத்தையும் விற்கறான்
நகரத்துல....
தேர்தலுன்னு வந்துப்புட்டா
தேவைக்கு துணிய தூக்கறான்
கழகத்துல....
தேவை தீருமட்டும்
தெருவோரமா தூங்கறான்
கட்டுக்குள்ள....
அய்யகோ நம்பிப்புட்டே
அம்மணமே நீ ஆயுசுக்கும்
தமிழகத்துல....
நடுவுல ஒருத்தியோ
நாட்டையே வித்துப்புட்டா
நண்பனுக்கு..
முதுகுல எழும்பில்லா
நாக்குக்கோ நக்கிடவும் நேரமில்ல
பகட்டுக்கு....
அந்த நகைச்சுவையான் சொன்னதுபோல்
காரித்துப்பியதை சேகரித்தே
முகவைநாட்டில்
ஒரு போகம் கழனியை உழுதிடலாம்..
வெக்கம்கெட்ட வேட்டிகளா
வாக்கு கேட்டு வந்திராதியடே
என் வாசலுக்கு....

0 Comments