மிக மிகச் சின்னதாய்
ஒரு ஆசை...
சிறியதாய் விமானம்
ஒன்று வாங்கி
அந்த விண்ணில் பறந்திடனும் ...

அதை  வீட்டினில் நிறுத்திடும்
அளவிற்கு ஒரு மிகச் சிறிய
வீடு கட்டிடனும்..

விமானத்தைப் பராமரிக்க
பத்து பணியாளர் வைத்து விடணும்...

அவருக்கு சம்பளம் கொடுக்க
ஒரு அலுவலகம் நடத்திடணும்..

அலுவலகத்திற்கு வருமானம்
சேர்க்க  ஒரே ஒரு
தொழிற்சாலை நடத்திடணும்....

தொழிற்சாலை பணியாளருக்கு சம்பளம் கொடுக்க
வருமானத்தைப் பெருக்கிட விலைவாசியை ஏற்றிடணும்....

விலைவாசியை ஏற்றியே
விவசாயத்தை நசுக்கிடணும்..

இந்த சின்ன ஆசை மட்டுமே...

ஒவ்வொரு அழிவிற்கும் காரணம்...