ஒருதலைக்காதல் இது
ஒருநாளும் சேரா கதை இது..
உன்னோடு நடந்து போக
உள்ளம் தானே ஏங்கிடுது
ஊருக்கு சேதி சொல்லி
உரிமை கொள்ள உருகிடுது..
சேலை தலைப்புக்கூட
சேதி சொல்ல அழைக்கிறது
சேர்வோமா நாமென்று
சந்தேகத்தில் அழுகிறது..
வாடிய பூக்கள் என்னை
பார்க்கும் போது அழுகிறது
வாசனையில்லா காற்று
மூச்சுக்குழலை அடைக்கிறது..
மூடிவைச்ச இமைகளுக்குள்
முதல்மழை வீசலையா
முதலும் கடைசியுமாய்
நீயிருக்க உனக்கு அது தோணலையா..
நான் ஏன்தான் பிறந்தேனோ
ஆணாகி தொலைத்தேனோ
உன்போலே நானிருந்தால்
உன் மனசு புரிஞ்சிருக்கும்..
பூவோடு நாராக என் மனசு
உன்னோடு சேர்ந்திருக்கும்..
ஆமால இது தப்பில்ல
ஆனாலும் ஆண்ஆனாலும்
எனக்கு வேறு வழி தெரியவில்லை..
வாழ்க்கையா உன்னைக்கேட்டேன்
வழக்கையா நான் கேட்டேன்..
வழுக்கை தலையோட
உன் அப்பன் வரும்போது
நகைப்பு தாங்கலியே..
என் நடுமண்டையில
உன் அப்பன் நட்டவடு ஆறலையே..
ஆனாலும் போதவில்லை
என் மனசுக்குள்ள
உன்னைத் தவிர யாருமில்லை...
ஒருதலைக்காதல் இது
ஒருநாளேனும் சேராமல் சாகாது...

0 Comments