தூரமாய் வானம்
மிக அருகில் சூரியன்ஓடிப்போய் பறித்துவந்து
கைகளுக்குள் அடைத்துவைத்து
இதழ் பதித்தே
இனியவனுக்கு பரிசளிக்க
ஆசை எனக்கு..
வானமும் தூரம்
இல்லை
என்னை வாட்டும்
காதலுக்கும் பஞ்சமில்லை..
வா..
காதலா..
காதலில் றெக்கை விரிப்போம்
காற்றிலே நாம் மிதப்போம்
மேகங்களில் முகம் புதைத்து
முத்தமழை பொழிந்திடுவோம்..
சந்திரனை சாட்சிவைத்து
இதழ் பதித்து முத்தமிட்டே
சூரியனை குளிர்விப்போம்..
சுண்டு விரலில்
கட்டி அதை
என்
காதலன் - உனக்கு
காதல் சின்னமாய்
பரிசளிக்க...
நானும்
நாள்கணக்கில் காத்திருக்கிறேன்...
வாடா..டே..என்னை வாட்டாதே..

0 Comments