கண்ணா...
கருநீல வண்ணா....நான்மட்டும் இராதையா பொறந்திருந்தா ....
கால்நடையாக நடந்து வந்து
உன் வீட்டு வாசலில்
ஒக்காந்து இருப்பேன்....
நீ கண் அசைக்கும் நொடிக்காக
நான் மாசக் கணக்கா
காத்திருப்பேன்..
மத்தியான வெயிலேயும்
நானோ மறைவின்றியே தூங்கிடுவேன்....உன்னையும்
கொஞ்சிடுவேன்...
உன் மனசு நீயே சொல்லிப்புட்டா நானும் மசக்கையில விழுந்திடுவேன்...
ஆடி என்ன ஓடிப்போக
எந்த நாளா இருந்தால் என்ன
நீ கையாட்டும் நாளுக்காக
நானும் கற்போடையே
காத்திருப்பேன் .....
கை பிடிப்பியோ
கட்டியணைப்பியோ
தாலி கட்டி கூட்டி போயி
தற்கொலை செய்யவைப்பியோ..
ஒரு நூறு வருஷம் கூடவே
கணவனாக வருவியோ..
இல்லை..
கற்பு தீர்ந்த அடுத்த நாளே
கழுத்தைப் பிடித்து தள்ளுவியோ...
எதுனாலும்
சந்தோசமா
நான் ஏத்துக்கிட்டு
உன் கூட வாரேன் ....
ஒரு நாள் ஒரு பொழுது
உன் கூடத்தான் வாழ வேணும்...
உன் முகத்தை பார்த்துக்கிட்டே
என் உசுரு தானே போகவேணும்...
அளவில்லா என் ஆனந்தமே
ஆனந்த தாண்டவனே
அற்புதனே
பரம்பொருளே
என் ஆணழகே
கோகுலவாசனே...
கோவிந்தனே..
நீ ஆடிடும் போதினிலே..
என் ஆசையெல்லாம்
தீர்க்க தானே உன்
அடிமடியில் சேரணுமே....
ஆண்டவனும் என்ன செஞ்சான்
அறிவு கெட்டு மயங்கிப்புட்டான்...
என் ஆசை எல்லாம்
மனசுக்குள்ள
பொத்தி வச்சே
என்ன ஆம்பளையா படைச்சுப்புட்டான்..
அய்யகோ
நான் என்ன செய்வேன்...
ஆண்டாளா மாறனுமே...
ஆசையெல்லாம் தீர்க்கணுமே...
இந்த
ஆணுயிர் தேவையில்லை...
அருவியே
என் உயிரை உருவியே
எடுத்துக்கோ....
அடுத்த ஜென்மமதில்
நானும்
பேரழகி பெண்ணாவே...
பிறப்பெடுப்பேன்...
என் பிறவிப்பயன்
அடைஞ்சிருவேன்....
ஆண்டவனே
ஆருயிரே... எனக்கு
பெண்ணாகும்
வரம் தந்திடய்யா...

0 Comments