காதல்
கலங்கவோ துகிலுரித்தாய்கண்ணோரமாய் என் காதலை
கற்பழித்தாய்...
இணங்கா இருவரிகளை
உச்சரித்தாய்
உயிரோடு
என்னுடலை
நீ சமைத்தாய்..
பிச்சைப்பாத்திரமாய்
நானோ
உன்
இம்சை இரவலை
இருதயமாய் கேட்டேன்..
இருப்பதை
உடுக்கவோ
உள்ளத்தை கள்ளமாக்கினாய்..
இருவரின் தேவைக்குமோ
இப்பிறப்பில்
இமை மூடினாய்
இதழாலே இருதயம் பூட்டினாய்....
இம்சை
தானடா
என் காதல்..
கழுத்தில்
கயிற்றோடும்..
கருவில் கருப்போடும்
நீயில்லா
இல்வாழ்க்கை
இவ்வாழ்க்கை..
எங்கிருக்கியோ
காணலியே..
அடி வயிற்றில்
உன்னாட்டம் ஓருயிரு
உயிர் தின்னுதே
தாங்கலயே..
நானும்
பசிக்கும் அழுவேனோ..
உன் பார்வைக்கு
அழுவேனோ..
குடிக்கு
அழுவேனோ
குடி மறந்தே சாவேனோ..
காதலைத் தின்றவள்
நானின்றோ
கானலாய் தேடறேன்
உன் முகமே..
வாராயோ
வீணரே
விதைத்துப் போன
வேசரே..

0 Comments